மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
நெல்லை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி.பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தற்காலிக விரிவுரையாளர்கள்மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் தற்காலிக விரிவுரையாளர்கள் நியமிக்ககப்பட இருக்கிறார்கள். பல்கலைக்கழக நிதி குழு விதிகளின்படி உதவிப் பேராசிரியர் பணிக்கு கல்வித்தகுதி உடையவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
தகுதியுடைய பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் இளம் முனைவர் (எம்.பில்.) பட்டம் பெற்றவர்கள் மணி நேர அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பதவிக்கு தகுந்த கல்வித் தகுதியுடையவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அத்துடன் செயலாக்கக் கட்டணம் ரூ.500 செலுத்தி அனுப்ப வேண்டும்.
24–ந் தேதிக்குள்...பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் சுயவிவரக்குறிப்புடன் அனைத்து சான்றொப்பமிட்ட நகல்களுடன் வருகிற 24–ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.