எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து வங்கி ஊழியர் தற்கொலை
கடனை திருப்பி செலுத்த முடியாததால் எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருடைய மகன் தீனதயாளன்(வயது 47). இவர் தான் வசித்து வந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். தீனதயாளன் வங்கியில் குறைந்த அளவு ஊதியத்திற்கே வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆனால் அதை தனது குடும்பத்தினரிடம் காட்டி கொள்ளாமல் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக அதிக அளவில் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதனால் கடன் தொகை அதிகமாகி, கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடந்த சில நாட்களாக அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு தீனதயாளன் வந்தார். இரவு 12 மணியளவில் ரெயில் நிலையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் எழும்பூர்-பூங்கா ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் வந்த சமயத்தில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் அவரது உடல் 2 துண்டுகளாகி சம்பவ இடத்திலே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எழும்பூர் ரெயில்வே போலீசார் தீனதயாளனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story