ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2017 4:30 AM IST (Updated: 19 July 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை, 

ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட பென்சன் தொகையை வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாயமலை, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மாயமலை கூறுகையில், “10, 20, 30 என ஆண்டு பணிக்கான தேக்கநிலை ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கிட வேண்டும். தணிக்கை என ஒட்டுமொத்த ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது. அப்படி பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக திருப்பி வழங்கிட வேண்டும். முக்கியமாக சமூக பாதுகாப்பு திட்ட பயனாளி ஓய்வூதியமான ரூ.1,500 என்பதை மாற்றி, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமான ரூ.3,050 வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, காப்பீடு, இலவச பஸ்பாஸ் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது”, என்றார். 

Next Story