பெரும்பாக்கத்தில் போலீஸ் ‘பூத்’ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது


பெரும்பாக்கத்தில் போலீஸ் ‘பூத்’ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2017 4:00 AM IST (Updated: 19 July 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் போலீஸ் ‘பூத்’ கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அரங்கநாதன். குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஏழுமலை குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரை அரங்கநாதன் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து அரங்கநாதனை எழில் நகரில் உள்ள போலீஸ் ‘பூத்’தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அரங்கநாதன், அவரது தந்தை ஏழுமலை மற்றும் உறவினரான மற்றொரு ஏழுமலை ஆகியோர் போலீஸ் ‘பூத்’ மீது கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்தது. மேலும் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.

இது பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story