ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரத்தில் 25-ந்தேதி கடையடைப்பு
ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சீபுரத்தில் வருகிற 25-ந்தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் கைத்தறி பட்டு ஜரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பட்டு நெசவுத்தொழில் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காஞ்சீபுரம் கைத்தறி பட்டு ஜரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஒய்.எம்.நாராயணசாமி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடையடைப்பு
பட்டு சேலைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளதால் காஞ்சீபுரம் கைத்தறி பட்டு சேலை, ஜரிகை தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பட்டு சேலைக்கு 5 சதவீதம், கோராவிற்கு 5 சதவீதம், ஜரிகைக்கு 12 சதவீதம் என மொத்தம் 22 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்து இருப்பதை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி காஞ்சீபுரத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story