கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்


கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 19 July 2017 4:30 AM IST (Updated: 19 July 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கீழ்முதலம்பேடு கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கீழ்முதலம்பேடு கிராமத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இங்கிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் வாகனங்களில் கடத்தப்படுவதாகவும் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 45 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த கவரைப்பேட்டை போலீசார், அங்கு இருந்த முனுசாமி (வயது 20) என்பவரை கைது செய்து மாவட்ட உணவு பொ ருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Next Story