நெடுவாசலில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
கல்லூரி மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து நெடுவாசலில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர்.
இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 98-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story