ஜிப்மர் நர்சுகள் ஆர்ப்பாட்டம்


ஜிப்மர் நர்சுகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2017 4:30 AM IST (Updated: 19 July 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஜிப்மர் நர்சுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, 

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 2,300 படுக்கை வசதிகள் உள்ளன. விதிகளின்படி இங்கு 3 ஆயிரத்து 600 நர்சுகள் பணியில் இருக்கவேண்டும். ஆனால் இப்போது 1,300 நர்சுகள் மட்டுமே பணியில் உள்ளனர்.

இதனால் நோயாளிகளுக்கு முழுமையான சேவை அளிக்க முடியவில்லை என்றும், நர்சுகளுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் நர்சுகள் நலச்சங்கத்தினர் தெரிவித்து வந்தனர். காலியாக உள்ள நர்சு பணியிடங்களை நிரப்பக்கோரி அவர்கள் நிர்வாகத்துக்கு பலமுறை கடிதம் கொடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

ஆனால் இதுகுறித்து நிர்வாக தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைக்கண்டித்து நர்சுகள் நலச் சங்கத்தினர் நேற்று நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவி ஷலீசியா தலைமை தாங்கினார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவை பாதிக்கப்படும் அளவில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். 

Next Story