முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் திருப்தி: ‘மும்பையில் மழைக்காலத்தில் பிரச்சினை இருக்காது’உத்தவ் தாக்கரே சொல்கிறார்


முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் திருப்தி: ‘மும்பையில் மழைக்காலத்தில் பிரச்சினை இருக்காது’உத்தவ் தாக்கரே சொல்கிறார்
x
தினத்தந்தி 19 July 2017 3:30 AM IST (Updated: 19 July 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தையொட்டி மும்பை மாநகராட்சி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தனக்கு திருப்தி அளிப்பதாகவும், மழைக்காலத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே மும்பை மலாடு பகுதியில் நேற்று

மும்பை,

மழைக்காலத்தையொட்டி மும்பை மாநகராட்சி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தனக்கு திருப்தி அளிப்பதாகவும், மழைக்காலத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே

மும்பை மலாடு பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது:–

மும்பை மாநகராட்சி எப்போதும் விமர்சனத்துக்கு உட்பட்டது. மும்பை மிதமிஞ்சிய மழையை பெற்றாலும், அதற்கு மாநகராட்சி தான் பொறுப்பா? மழைக்காலத்தில் மும்பை நகரம் நல்ல சூழலில் இருக்கும். ஏனென்றால், மழைக்காலத்தையொட்டி மாநகராட்சி மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கு திருப்தி அளிக்கிறது. எனவே, மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதோ அல்லது அசம்பாவித சம்பவங்களோ ஏற்படாது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

பாதிப்பு

நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது சாலைகளில் தண்ணீர் தேங்குவதும், குண்டும், குழியுமான சாலைகளாலும், ரெயில் சேவை பாதிப்பினாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story