உருது பள்ளியை இடம் மாற்ற முஸ்லீம்கள் மனு
அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் கமலகுமாரியிடம் முஸ்லிம்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்,
அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் கமலகுமாரியிடம் முஸ்லிம்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:–
அரக்கோணம் மசூதி தெருவில் கடந்த 2000–ம் ஆண்டு வரை நகராட்சி உருது பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை இருந்ததால் அரக்கோணம், கிருபில்ஸ்பேட்டை பகுதிக்கு உருது பள்ளி மாற்றப்பட்டது. கிருபில்ஸ்பேட்டைக்கு பள்ளி மாற்றப்பட்டதால் பள்ளிக்கு செல்ல 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அரக்கோணத்தில் முஸ்லீம்கள் அதிக அளவில் மசூதி தெருவில் வசிப்பதால் மீண்டும் நகராட்சி உருது பள்ளியை மசூதி தெருவில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story