புதிய வாக்காளர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம்
அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசினர் கலை கல்லூரியில் புதிய வாக்காளர் பெயர்களை ஆன்லைன் மூலமாக எவ்வாறு சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசினர் கலை கல்லூரியில் புதிய வாக்காளர் பெயர்களை ஆன்லைன் மூலமாக எவ்வாறு சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார். பேராசிரியர் குமார் வரவேற்றார்.
முகாமில் 250 மாணவ, மாணவிகள் புதிய வாக்காளர்களாவதற்கு தகுதி பெற்று இருந்தனர். இதில் 60 பேர்களின் பெயர்களை உடனடியாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 190 மாணவ, மாணவிகளின் பெயர்களை இந்த மாத இறுதிக்குள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட உள்ளது.
Related Tags :
Next Story