தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அம்மா திட்ட முகாம்அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது.
இந்த முகாம் தூத்துக்குடி தாலுகாவில் தூத்துக்குடி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா சிறுத்தொண்டநல்லூரிலும், திருச்செந்தூர் தாலுகா வெங்கட்ராமானுஜபுரத்திலும், சாத்தான்குளம் தாலுகா நெடுங்குளத்திலும், கோவில்பட்டி தாலுகா இலுப்பையூரணியிலும், விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் தெற்கு கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகா தலைக்காட்டுபுரம் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா கீழமங்கலத்திலும், கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை கிராமத்திலும் நடக்கிறது.
கோரிக்கை மனுக்கள்முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.