புதுக்கோட்டையில் 2–வது நாளாக அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாயிகளை காப்போம். நெடுவாசல், கதிராமங்கலத்தை மீட்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். நேற்றும் 2–வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story