பெரும்பாக்கத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ‘ஜி’ பிளாக்கில் 4-வது மாடியில் வசிப்பவர் ராஜேஸ்வரி (வயது 38). இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஆலந்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் மற்றும் பட்டு புடவைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அதே போல் 5-வது மாடியில் வசிக்கும் ராஜன்முருகன்(27) என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் வெள்ளி குத்து விளக்கு, எல்.சி.டி. டி.வி. ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
ஒரே குடியிருப்பில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு போன சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story