ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் ‘உயிருள்ள’ மருந்து!
‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்றுதானே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஆனால் இன்றைய நவீன உலகத்தில் இதையெல்லாம் யாரும் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை! ஏனென்றால், “மருந்து என்றால் அது முழுக்க முழுக்க ரசாயனமாகத்தான் இருக்க வேண்டும். அத்தகைய ஒரு மருந்துக்குத்தான் நோய்களை குணப்படுத்தும் வல்லமை இருக்கிறது” என்பதுதான் பெரும்பாலான மக்களின் மனதில் வேரூன்றி இருக்கும் பொதுப்புத்தி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உலகின் பெரும்பாலான மக்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வரும் அலோபதி அல்லது ரசாயன மருந்துகள் ஆபத்தான பல பின் விளைவுகள் கொண்டவை என்பதுதான் வருந்தத்தக்க உண்மை. இதற்கு உயிர்கொல்லியான புற்றுநோய் மருந்துகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கிட்டத்தட்ட அனைத்து வகை புற்றுநோய் சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படும் ‘கீமோதெரபி‘ வகை மருந்துகள் ஒவ்வாமைகள், செரிமானக் கோளாறு, முடி உதிர்தல் உள்ளிட்ட மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
ஆனாலும், இதுவரை புற்றுநோய் சிகிச்சைகளுக்கு கீமோதெரபியை விட்டால் வேறு வழியில்லை எனற நிலையே நீடித்து வருகிறது. மிகவும் சுவாரசியமாக, Bcell acute lymphoblastic leukemia எனப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு கட்டுப்படாத, அரிதான ஒரு வகை லியூக்கீமியா ரத்த புற்றுநோயை, நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு, புற்றணுக்களை தேடிக் கண்டறிந்து கொல்லும்படி மரபணுமாற்றம் செய்யப்பட்ட ‘டி’ உயிரணுக்களை, மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்தி குணப்படுத்தியுள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள்.
முக்கியமாக, ‘உயிருள்ள மருந்து’ என்று அழைக்கப்படும் இந்த ஜீன் தெரபி அல்லது மரபணு மாற்ற சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கும்படி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து (FDA) நிர்வாகத்தின் ஆலோசனை செயற்குழுவானது பரிந்துரை செய்துள்ளது. FDA-M¡ ஆலோசனை செயற்குழு ஒப்புதல் அளித்து பரிந்துரை செய்துள்ள உலகின் முதல் ஜீன் தெரபி சிகிச்சை இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது! ‘கார் டி செல் இம்மியூனோ தெரபி (CART cell immunotherapy)’ என்று அழைக்கப்படும் இந்த புதிய புற்றுநோய் சிகிச்சையானது, 11 நாடுகளில் உள்ள 25 மருத்துவமனைகளில் உள்ள 3 முதல் 23 வயதான, கீமோதெரபி சிகிச்சையால் கைவிடப்பட்ட 88 லியூக்கீமியா புற்றுநோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 83% நோயாளிகளின் புற்றுநோயை குணப்படுத்தியுள்ள இந்த சிகிச்சையானது கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட உடலின் நோய் எதிர்ப்பு மையத்தின் உயிரணுக்களை அடிப்படையாகக் கொண்ட இம்மியூனோ தெரபி எனப்படும் சிகிச்சையின் முதல் முழுமையான வெற்றிகரமான உதாரணம் என்று கூறப்படுகிறது. கீமோதரபி சிகிச்சை பலனளிக்காமல் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த, எமிலி ஒயிட்ஹெட் எனும் ஆறு வயது அமெரிக்க சிறுமிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு சோதனை சிகிச்சையாகவே இந்த கார் டி செல் இம்மியூனோ தெரபி முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது 12 வயதாகும் எமிலிக்கு இந்த சிகிச்சைக்கு பின்னான கடந்த ஆறு வருடங்களில் புற்றுநோய் மீண்டும் ஏற்படாததோடு மிக மிக ஆரோக்கியமாக இருக்கிறார் எமிலி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த சிகிச்சையானது மிகவும் நம்பகமான மற்றும் உயிரை மீட்டுக்கொண்டு வரும் அசாத்திய திறன்கொண்டதுதான் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, இரண்டு ஆபத்தான பின் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஒன்று, நோய் எதிர்ப்பு உயிரணுக்களே உடல் பாகங்களை தாக்கக்கூடிய cytokine release syndrome எனப்படும் உயிருக்கு ஆபத்தான பின்விளைவு. மற்றொன்று, உயிருக்கு ஆபத்தாக முடியக்கூடிய மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் பின்விளைவு.
அது மட்டுமல்லாமல், இந்த சிகிச்சைக்கான செலவு சுமார் 3 முதல் 6 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்பதும் இந்த சிகிச்சையை உடனே பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பதை சற்றே நிறுத்தி வைத்துள்ளது. மேலதிக ஆய்வுகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மீதான பரிசோதனைகளுக்குப் பின்னர் இந்த சிகிச்சையானது பரவலான பயன்பாட்டுக்கு வரலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story