கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பலி மற்றொன்று உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பலி மற்றொன்று உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 21 July 2017 4:30 AM IST (Updated: 21 July 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பலி மற்றொன்று உயிருடன் மீட்பு

பெரும்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, பெரும்பாறை, பெரியூர், கே.சி.பட்டி, பாச்சலூர் வனப்பகுதியில் காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளன. வனப்பகுதியில் ஏற்பட்டு கடும் வறட்சி காரணமாக தண்ணீரை அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், தோட்டங்களுக்குள்ளும் புகுந்து வருகின்றன. சில நேரங்களில் காட்டெருமைகள் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்தநிலையில் நேற்று 2 காட்டெருமைகள் தண்ணீரை தேடி நல்லூர்காடு வளைவு அருகே உள்ள ஒரு காபி தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் 2 காட்டெருமைகளும் தவறி விழுந்தன. தோட்டத்துக்கு சென்ற விவசாயிகள் கிணற்றுக்குள் காட்டெருமைகள் தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே ஒரு காட்டெருமை நீரில் மூழ்கி இறந்தது. மற்றொரு காட்டெருமை உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதையடுத்து அந்த காட்டெருமை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

மேலும் இறந்த காட்டெருமையின் உடலை கைப்பற்றி பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். 

Related Tags :
Next Story