ஓட்டல்-கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு


ஓட்டல்-கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 21 July 2017 4:30 AM IST (Updated: 21 July 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் உள்ள ஓட்டல்-கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம்,

உணவு பாதுகாப்பு மாநில ஆணையர் மற்றும் நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரவி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள உணவு விற்பனை நிறுவனங்களான ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் பேக்கரி உள்ளிட்ட கடைகளில் நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்படும் தொட்டிகள், பாத்திரங்களை ஆய்வு செய்தார். பின்னர் சமையல் செய்யும் இடம் சுத்தமாக இருக்கிறதா? என ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உணவு விற்பனை நிலையங்களில் குடிநீரை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும். நீர்த்தேக்க தொட்டிகள் அடிக்கடி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

குடிநீர் குளோரினேசன் செய்யப்பட வேண்டும். உபயோகித்த தேங்காய் மூடி, காலி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக், பேப்பர் கப்புகள் முறையாக அகற்றப்பட வேண்டும். கழிவுநீர் அகற்றப்பட வேண்டும். தேங்கும் நீரில்தான் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடீஸ் எனும் கொசு உற்பத்தியாகின்றன. எனவே எந்த வகையிலும் உணவு விற்பனை நிலையங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றாத உணவு விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

Related Tags :
Next Story