டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக 7 குழுக்கள் அமைப்பு
கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ் கூறியதாவது:- கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக 30 தீவிர கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், அலுவலர்களை கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், ஆய்வு செய்து வருகின்றனர்.
அத்துடன் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அபேட் மருந்து தெளித்தல், பிளிச்சிங் பவுடர் கொண்டு தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் செய்யப்படுகிறது. மேலும், கொசுப்புழுக்கள் உள்ள நீர் தரையில் கொட்டி அழிக்கப்படுகிறது. வீடு, வீடாக செல்லும் போது காய்ச்சல் மற்றும் இதர நோயாளிகள் விவரம் சேகரிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. நகர் சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கொசுக்களை ஒழிக்க நகர் பகுதியில் வீடு, வீடாக புகை மருந்தும் அடிக்கப்படுகிறது.
மேலும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வீடுகளில் ஒட்டப்பட்டு, துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி நகர் முழுவதும் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் இருப்பு பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வீடுகளில் சேமித்து வைக்கப்படும் நீர் ஆதாரங்களில் குளோரின் பவுடர்கள் அடங்கிய சிறு பைகள் போடப்படுகிறது. இப்பணியை துப்புரவு அலுவலர் மோகனசுந்தரம், துப்புரவு ஆய்வாளர்கள் ரமேஷ், சீனிவாசலு, செந்தில் ஆகியோர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story