சிறப்பு மனுநீதிநாள் முகாம்


சிறப்பு மனுநீதிநாள் முகாம்
x
தினத்தந்தி 22 July 2017 2:45 AM IST (Updated: 21 July 2017 7:52 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் ஒன்றியம், பீமகுளம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது.

வாணியம்பாடி,

ஆலங்காயம் ஒன்றியம், பீமகுளம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். தாசில்தார் முரளிகுமார் வரவேற்றார். முகாமில் 374 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் ஆலங்காயம் வனச்சரக அலுவலர் முனியப்பனர், ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story