வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ராமன் பங்கேற்பு


வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ராமன் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 July 2017 2:30 AM IST (Updated: 21 July 2017 7:52 PM IST)
t-max-icont-min-icon

மேல்விஷாரத்தில் உள்ள சி.அப்துல்ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை,

மேல்விஷாரத்தில் உள்ள சி.அப்துல்ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரியின் தலைவர் எஸ்.ஜியாவுத்தின் அகமது தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் வி.எம்.அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் உதவி கலெக்டர்கள் ஸ்ரீகாந்த், அப்துல் முனீர் ஆகியோர் வாக்கு அளிப்பதின் அவசியம், வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது குறித்து பேசினர்.

முகாமில் 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 60 மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பீர் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் ரபீக் அகமது, பேராசிரியர் அப்துல் வாகித், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story