ரவுடி ஸ்ரீதரின் மகன் 3-வது நாளாக விசாரணைக்கு ஆஜர் போலீசார் துருவி துருவி விசாரணை
காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் மகன் 3-வது நாளாக பெரிய காஞ்சீபுரம் போலீசில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது காஞ்சீபுரம், சென்னையில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரை பிரகனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது.
தற்போது வெளிநாட்டில் ஸ்ரீதர் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரின் கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி ‘சீல்’ வைத்தனர்.
தொடர் விசாரணை
இந்நிலையில் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் (வயது 24) லண்டனில் இருந்து சென்னை வந்த போது அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மடக்கி காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் ஸ்ரீதர் செய்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக 14 நாட்கள் காஞ்சீபுரம் போலீசில் ஆஜராக சந்தோஷ்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி சந்தோஷ்குமார் 20, 21-ந் தேதிகளில் பெரிய காஞ்சீபுரம் போலீசில் ஆஜரானார். 3-வது நாளாக நேற்றும் அவர் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரிகளான வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
மேலும் சந்தோஷ்குமாரின் செல்போன், மடிக்கணினி ஆகியவற்றையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஸ்ரீதர் நண்பர்களின் செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story