தர்மபுரியில் காப்பீட்டு கழக ஊழியர்கள்–அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் காப்பீட்டு கழக ஊழியர்கள்–அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2017 3:36 AM IST (Updated: 22 July 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

மத்திய அரசின் ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காப்பீட்டு நிறுவன அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க கிளைத்தலைவர் வேடியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேந்திரன், கோட்ட இணை செயலாளர் மாதேஸ்வரன், அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் மகேஷ்குமார், வளர்ச்சி அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் குமரேசன், முகவர் சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் கருணாநிதி, மரியலூயிஸ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி பொதுமக்கள் மற்றும் காப்பீட்டு துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் இந்த வரிவிதிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். காப்பீட்டு பிரீமியம் மீதான சேவைவரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊழியர்கள், முகவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சரவணகுமார் நன்றி கூறினார்.


Next Story