ஒலி எழுப்பாத விமான வடிவமைப்பில் உதவும் ஆந்தைகள்


ஒலி எழுப்பாத விமான வடிவமைப்பில் உதவும் ஆந்தைகள்
x
தினத்தந்தி 22 July 2017 6:00 PM IST (Updated: 22 July 2017 1:03 PM IST)
t-max-icont-min-icon

‘பறவையைக் கண்டான்... விமானம் படைத்தான்’ என்பது கவிஞர் வரி.

ஆரம்பத்தில் விமான வடிவமைப்புக்கு பறவைகள் உதவியதைப் போல, தற்போது ஒலி எழுப்பாத டர்பைன்கள் மற்றும் விமானங்களை வடிவமைக்க ஆந்தைகள் உதவுகின்றன.

ஆம், ஆந்தைகளை முன்மாதிரியாகக் கொண்டே, இரைச்சலற்ற விமானங்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

பறவைகளில் ஆந்தைகள் சற்று வித்தியாசமான இயல்பைக் கொண்டதாக இருக்கின்றன. அதாவது இவை பறக்கும் போது இறக்கைகள் ஒலி எழுப்புவதில்லை என்பது ஓர் ஆச்சரியம்.

எனவே இந்த நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ‘டர்பைன்’ எனப்படும் சுழலி மற்றும் விமானத்தை வடிவமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஜப்பானில் உள்ள சிபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவே இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

அந்த ஆய்வு வெற்றி பெற்றால், பேரொலி எழுப்பாத விமானங்கள் உருவாகக்கூடும். அதற்கான பெருமையும் ஆந்தைகளுக்குக் கிட்டும்!

Next Story