நீட் தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்க கோரி நெல்லையில், தி.மு.க.வினர் மனித சங்கிலி 27–ந் தேதி நடக்கிறது


நீட் தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்க கோரி நெல்லையில், தி.மு.க.வினர் மனித சங்கிலி 27–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 22 July 2017 8:30 PM GMT (Updated: 22 July 2017 6:42 PM GMT)

நீட் தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்க் கோரி தி.மு.க. சார்பில் வருகிற 27–ந் தேதி (வியாழக்கிழமை) நெல்லையில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

நெல்லை,

நீட் தேர்வில் இருந்து விதி விலக்கு அளிக்க் கோரி தி.மு.க. சார்பில் வருகிற 27–ந் தேதி (வியாழக்கிழமை) நெல்லையில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன் (கிழக்கு), சிவபத்மநாதன் (மேற்கு), அப்துல்வகாப் (மத்திய மாவட்டம்) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மனித சங்கிலி போராட்டம்

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் என்ற தேர்வு முறையை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படியும் மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.

நெல்லையில்...

நெல்லை கிழக்கு, மத்திய, மேற்கு ஆகிய மாவடிடங்கள் சார்பில் மாவட்ட தலை நகரான நெல்லையில் வருகிற 27–ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.

நெல்லை சந்திப்பு, ஈரடுக்கு மேம்பாலம் மேற்கு பகுதி முதல் (தபால் நிலையம் முன்பு) நெல்லை டவுன் வரை நான்கு ரத வீதிகளையும் சுற்றி கைகோர்த்து நிற்கப்படும். இந்த போராட்டத்தில் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story