ஓட்டப்பிடாரம் அருகே தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்


ஓட்டப்பிடாரம் அருகே தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்
x
தினத்தந்தி 22 July 2017 9:30 PM GMT (Updated: 2017-07-23T00:17:26+05:30)

ஓட்டப்பிடாரம் அருகே தி.மு.க. சார்பில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே தி.மு.க. சார்பில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

பிரசார கூட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் பஸ் நிலையம் அருகே தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் ரவி, இளையபெருமாள், ஊராட்சி பிரதிநிதி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சத்தியராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். முன்னதாக முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி நினைவு கொடி கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது;–

கடுமையாக உழைக்க வேண்டும்

தமிழகத்தை மோடியிடம் விற்க நினைக்கும் தமிழக முதல்வரின் எண்ணத்தை மாற்ற கழக தொண்டர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். ஒரு போதும் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க கூடாது. கொங்கு மண்டலம் என கூறப்படும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மாவட்டத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்திற்கு தேர்தல் நடக்கும் காலம் விரைவில் வரும். அப்போது ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி தொடர அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், தலைமை கழக பேச்சாளர்கள் இளஞ்செழியன், சரத்பாலா, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சங்கர், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் மேகலிங்கம், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் மணிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை மெயின் பஜாரில் கிழக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் கீதாஜீவன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.


Next Story