கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 23 July 2017 3:00 AM IST (Updated: 23 July 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

கொரட்டூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.

ஆவடி,

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். டெய்லர். இவரது மனைவி லட்சுமி (வயது34). கணவன்–மனைவி இருவரும் நேற்றுமுன்தினம் இரவு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 இரவு 10.45 மணி அளவில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கொரட்டூர் 200 அடி சாலையில் சென்று கொண்டிருந்தனர். 

5 பவுன் நகை பறிப்பு

அப்போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 2 பேர் திடீரென லட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

 இதுகுறித்து கொரட்டூர் போலீசில் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story