ஆடி முதல்வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்தனர்


ஆடி முதல்வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்தனர்
x
தினத்தந்தி 23 July 2017 4:00 AM IST (Updated: 23 July 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஆடி முதல் வெள்ளியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெண்கள் குவிளக்கு பூஜை செய்தனர்.

புதுக்கோட்டை,

ஆடி முதல் வெள்ளியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து குத்துவிளக்கு பூஜை நடைபெற்றன. திருவப்பூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இலுப்பூர் பொன்வாசிநாதர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் இலுப்பூர், அன்னவாசல் பகுதி கோவில்களில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ராயவரம் அருகே உள்ள ஆயிங்குடி கிராமத்தில் உள்ள கள்ளியநாச்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிங்குடி, குருந்தங்குடி, வளையன்வயல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஆவுடையார்கோவில் அருகே விளானூர் கிராமத்தில் உள்ள பாம்பனிஅம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் விளானூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதணைகள் நடைபெற்றன. சில பக்தர்கள் கோழிகளை கொண்டு வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.


Next Story