காகித ஆலை நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு


காகித ஆலை நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 23 July 2017 3:30 AM IST (Updated: 23 July 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

காகித ஆலை நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு

கரூர்,

கரூர் ஆத்தூர் பிரிவு ஆண்டவர் நகரை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 39). இவர் புகளூரில் உள்ள டி.என்.பி.எல். காகித ஆலை நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டை பூட்டி விட்டு சம்பவத்தன்று பணிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ¾ பவுன் நகை, ரூ.4 ஆயிரம் திருடு போகி இருந்தது. மேலும் வீட்டில் 2 சிலிண்டரையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.


Next Story