கடம்பூரில் வனத்துறை அலுவலர் குடியிருப்பு அருகில் சந்தன மரம் வெட்டி கடத்தல்
கடம்பூரில் மர்ம நபர்கள் துணிச்சலாக வனத்துறை அலுவலர் குடியிருப்பு அருகே இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுவிட்டார்கள்.
டி.என்.பாளையம்,
டி.என்.பாளையம் அடுத்த கடம்பூரில் வனத்துறை ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இதன் அருகிலேயே அங்கன்வாடி மைய கட்டிடமும், கிராம நிர்வாக அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. வனத்துறை குடியிருப்பின் அருகில் பழமையான சந்தன மரம் ஒன்று வளர்ந்திருந்தது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் அங்கு வந்து சந்தன மரத்தை வெட்டி, கிளைகளை அங்கேயே போட்டுவிட்டு மரத்தை மட்டும் வாகனத்தில் கடத்தி சென்றுவிட்டார் கள்.
நேற்று முன்தினம் காலை அந்த பகுதி பொதுமக்கள் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
வனத்துறை ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலேயே இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டதால், அதிகாரிகள் எப்படியும் மரத்தை வெட்டியவர்களை கண்டுபிடித்து கைது செய்துவிடுவார்கள் என்று பொதுமக்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் வனத்துறையோ?, போலீசாரோ? இதுகுறித்து எந்த விசாரணை நடத்தி யாரையும் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, யாரிடமும் விசாரணை நடத்தவில்லை என்று தெரிந்தது. போலீசாரிடம் கேட்டால் யாரும் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை என்றார்கள். ஆனால் அந்த பகுதி மக்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Tags :
Next Story