நவிமும்பையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி


நவிமும்பையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 23 July 2017 3:50 AM IST (Updated: 23 July 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.

மும்பை,

நவிமும்பையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த வாலிபர்

நவிமும்பை கோபர்கைர்னே ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக வாஷியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்


விசாரணையில் உயிரிழந்த வாலிபர் கோபர்கைர்னேவை சேர்ந்த ஷாபா அகமது சாக்குர் அலி (வயது18) என்பதும், கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. மின்சார ரெயிலில் பயணம் செய்தபோது, அவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து போனது தெரியவந்தது.

இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Next Story