ரெயில்நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மோதல்; 16 பேர் காயம்


ரெயில்நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மோதல்; 16 பேர் காயம்
x
தினத்தந்தி 23 July 2017 10:45 PM GMT (Updated: 23 July 2017 8:42 PM GMT)

நாமக்கல் ரெயில்நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மோதல்; 16 பேர் காயம்

நாமக்கல்,

நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் கோழித்தீவன மூலப்பொருளான கம்பு 2,650 டன் நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த மூட்டைகளை இறக்குவது தொடர்பாக சி.ஐ.டி.யு. மற்றும் பாரதீய மஸ்தூர் சங்க சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை கற்களை வீசியும், தடிகளை எடுத்தும் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. மேலும், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் தணிந்தது. இதற்கிடையே இந்த மோதல் சம்பவத்தில் காயம் அடைந்த பாரதீய மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த 16 பேர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story