ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது
கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது35). அதே தெருவை சேர்ந்த கருப்பையன் மகன் பாஸ்கர்(29).ஆட்டோ டிரைவர்கள். இவர்கள் 2 பேரும் திருவலஞ்சுழி நுழைவு வாயில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தங்களது ஆட்டோவை நிறுத்தி ஓட்டி வருகின்றனர். தர்மராஜிக்கும், பாஸ்கருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்டில் ஒருவர் சவாரிக்கு வந்தபோது முதலில் நிறுத்தியிருந்த தர்மராஜ் தனது ஆட்டோவில் அவரை அழைத்துச் செல்ல ஏற்றினார். அப்போது அங்கிருந்த பாஸ்கர் நான்தான் முதலில் சவாரிக்கு செல்வேன் என கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தர்மராஜை வெட்டினார். இதை தடுக்க முயன்ற அவரது இடது கையின் மணிகட்டு துண்டானது. படுகாயம் அடைந்த தர்மராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story