உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 July 2017 10:45 PM GMT (Updated: 26 July 2017 9:07 PM GMT)

கரூரில் உலக மக்கள் தொகை தின விழிப் புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கோவிந்தராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரூர்,

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப் புணர்வு ஊர்வலம் கரூரில் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலத்தை கலெக் டர் கோவிந்தராஜ் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறிய த ாவது:-

இந்த ஆண்டு 28-வது உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாக வைத்து அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிய அலை, புதிய நம்பிக்கை, முழுபொறுப்பு, இதுவே குடும்ப வளர்ச்சி என்ற கருத்தை மையமாக கொண்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி அவசியம். அதிலும் பெண் கல்வி மிகவும் அவசியம். எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப் படுத்த இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்களும் குடும்ப நலத்தில் பெண்களின் பங்களிப்பில் பங்கு கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நவீன முறையில் எந்த வித பாதிப்பும் இல்லாத குடும்பநல சிகிச்சை முறை ஆண்களுக்கு உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஆண்களும் ஒத்துழைக்க வேண்டும்.

குடும்பத்தில் அங்கத்தினர் கள் எண்ணிக்கை பெருகி கொண்டே போவதால் சமுதா யத்தில் வறுமை பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையால் நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழல் பாதித்து நம் வாழ்வாதாரத் தையும், அத்தியாவசிய தேவை களையும் பாதிக்கிறது. வேலை வாய்ப்பு மற்றும் பொருளா தாரம் பாதிக்கப்படுகிறது.

பெருகி வரும் மக்கள் தொகையில் அடுத்த 20 ஆண்டுகளில் குடிநீர் பற்றாக் குறை ஏற்படும் என வல்லுனர் கள் அறிவித்துள்ளனர்.

மேலும் பெருகி வரும் வாகனங்களினால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதனால் வெப்பம் உயர்ந்து கொண்டே போகிறது. சீதோஷ்ண மாற்றங்களுக்கும் இது காரணமாகிறது. மக்கள் பெருக்கத்தால் விளை நிலங் கள் குடியிருப்புகளாக மாறி உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. மே லும் மக்கள் தொகை பெருக்கத் தால் அரசு திட்டங்களின் முழு பயன்கள் மக்களை சென்று அடைவதை தடுத்து விடுகிறது. இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாற மக்கள் தொகைப்பெருக்கம் தடை யாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தொடக்க நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயகுமார், மருத்துவம், ஊரக நலம் மற்றும் குடும்ப நலம் துணை இயக் குனர் எலிசபெத்மேரி, சுகா தார பணிகள் துணை இயக் குனர் நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story