யார் வேண்டுமானாலும் முதல்வர் கனவு காணலாம்: வைகோ பேட்டி
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மதுரை,
தமிழகத்தில் ரஜினி, கமல் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வயது வரம்பு தேவையில்லை. கட்சி ஆரம்பித்து யார் வேண்டுமானாலும் முதல்வர் கனவு காணலாம். இது ஜனநாயக நாடு. பிரபலங்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. குஜராத் மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு தாவாமல் தடுக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க அக்கட்சியின் தலைமை போராட வேண்டிய நிலை உள்ளது. இதன் வாயிலாக அங்கு குதிரை பேர அரசியல் நடப்பது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story