தலையில் கல்லை போட்டு கட்டிட தொழிலாளி படுகொலை பரபரப்பு தகவல்கள்
சேலம் அருகே சுடுகாட்டில் கட்டிட தொழிலாளி வாயில் துணியால் கட்டப்பட்டு தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆட்டையாம்பட்டி,
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சுடுகாட்டில் தலையில் கல்லால் தாக்கி ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சேலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுர்ஷித்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சேகர் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியால் கட்டி, தலையில் கல்லால் தாக்கி மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்ட சேகர், கட்டிட வேலைக்கு சென்று சிமெண்டு கலவை கலக்கி கொடுப்பது மற்றும் இதர கூலி வேலைக்கும் சென்று வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பதாகவும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கைக்குழந்தைகளுடன் மனைவி திருச்செங்கோட்டுக்கு சென்று இன்னொருவருடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனி ஆளாக வசித்து வந்த சேகர் பஸ் நிலையம், கோவில்களிலும் தங்கி வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்த வீடு இல்லை. அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சில நேரங்களில் சென்று வருவார். இறந்த சேகர் யாரிடமும் சகஜமாக பேச மாட்டார் என்றும், திருநங்கை குணாதிசயம் உடையவர் என்றும் கூறப்படுகிறது.
எனவே இது திட்டமிட்டு நடந்த கொலையா? அல்லது ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இருந்த போதிலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் கொலை பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இருக்கிறது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story