குழந்தை பெற்ற சில மணி நேரத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
சேலத்தில் குழந்தை பெற்ற சில மணி நேரத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார். இதையடுத்து சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட அம்மாபேட்டை குமரன் காலனியை சேர்ந்தவர் ஷேக் ஷகசாத்கான். இவர் கரூரில் மூக்கு கண்ணாடி கடை நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி மெஹராஜ் பானு(வயது 26). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியான மெஹராஜ் பானுவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மெஹராஜ் பானுவுக்கு இரவில் ஆண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மெஹராஜ் பானு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில், அந்த பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டால் தான் மெஹராஜ் பானு இறந்ததாக கூறி பொதுமக்கள், ஜோதி தியேட்டர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள், குமரன் காலனியில் குப்பைகள் உடனே அள்ளாமலும், சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
அப்போது போலீசார் அவர்களிடம், இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். குழந்தை பெற்ற சில மணி நேரத்திலேயே மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story