அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
அரசு துறை ஊர்தி ஓட்டுனர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணி,
தலைவராக ஆர்.செந்தமிழ்செல்வனும், மாவட்ட கவுரவத்தலைவராக டி.உமாசங்கரும், மாவட்ட துணைத்தலைவர்களாக சி.கணபதி, கே.ஜெய்சங்கர், மாவட்ட செயலாளராக எஸ்.ராஜசேகர், மாவட்ட அமைப்பு செயலாளராக ஜி.சுப்பிரமணி, மாநில செயற்குழு உறுப்பினராக எஸ்.துளசிராமன், மாவட்ட பொருளாளராக எ.இளங்கோவன், மாவட்ட தணிக்கையாளராக எஸ்.செல்வராஜ், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக ஏழுமலை, மாவட்ட துணைச் செயலாளராக கஜேந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் திருவண்ணாமலையில் நடந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா மேடையில் ஆரணியை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டத்தையும், ஜமுனாமரத்தூர் தனி தாலுகாவாகவும் அறிவித்த தமிழக முதல்–அமைச்சருக்கும், ஆரணி வருவாய் கோட்டம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.7–வது ஊதியக்குழு அமல்படுத்துவதற்கு முன்பு ஓட்டுனர்களின் தர ஊதிய முரண்பாடுகளை 3 ஆயிரத்து 400 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். வேளாண்மைத்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஓட்டுனர்கள் அனைவரையும் நிரந்தர ஓட்டுனர்களாக நியமித்து விகிதாச்சார ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறையில் பணியமர்த்தப்படும் ஓட்டுனர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரந்தர பணியாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் முடிந்த பழைய வாகனங்களுக்கு பதிலாக அனைத்துத்துறைகளுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துத்துறை ஊர்தி ஓட்டுனர்களும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் கே.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.