முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் நினைவு நாள் நிகழ்ச்சி ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்


முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் நினைவு நாள் நிகழ்ச்சி ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்
x
தினத்தந்தி 1 Aug 2017 3:30 AM IST (Updated: 31 July 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் நினைவு நாள் நிகழ்ச்சியையொட்டி ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மவுன ஊர்வலம் மல்லாங்கிணறு பஜாரில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் அமைதியாக ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலம் அவரது நினைவிடத்தில் முடிவுற்று அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தங்கப்பாண்டியனின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மன்னன், உதயகுமார், கோபிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், ப.பா.போஸ், நரிக்குடி கண்ணன், பொன்னுத்தம்பி, சந்தனபாண்டி, காரியாபட்டி நகர செயலாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகச்சாமி, கமலிபாரதி, சந்திரன், காரியாபட்டி முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மணி என்ற ராமநாதன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, வீரசோழன் மாரிமுத்து, மணிவண்ணன், சம்பத், வழக்கறிஞர்கள் தங்கப்பாண்டியன், ராமகிருஷ்ணன், செல்வம், ஜோசப், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலமுருகன், ஜெய்சந்திரன், சிவசக்தி, பாஸ்கரன், ராஜமாணிக்கம், முருகன், முத்துராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் சம்பத், நரிக்குடி பால.செல்லப்பா, ஏ.முக்குளம் தங்கப்பாண்டியன், வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணிவாசகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன், ரெட்டியார் நல அறக்கட்டளை முன்னாள் தலைவர் சந்திரபாலு, வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் ரெங்கராஜர், மாவட்ட துணை செயலாளர் ரூபசுந்தரி, காதர் பாட்சா, லோகநான், மைலி முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story