கூட்டுறவு பால் வழங்கும் சங்க கடையை அகற்ற கூடாது கலெக்டரிடம் மனு
ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கூட்டுறவு பால் வழங்கும் சங்க கடையை அகற்ற கூடாது கலெக்டரிடம் மனு
விருதுநகர்,
ராஜபாளையம் பழைய பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் ராஜபாளையம் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தின் கடை உள்ளது. இங்கு பொதுமக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக குறைந்த விலையில் டீ, பால் மற்றும் பால்பேடா ஆகியவையும் ஆவின் நிறுவனத்தின் பால் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் இக்கடைக்கு நிலமதிப்பு அடிப்படையில் வாடகையை உயர்த்தி நோட்டீஸ் வழங்கி உள்ளது. மேலும் கடைகளை பொதுஏலம் விடுவதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தின் கடையான இந்த கடைக்கு குறைந்த வாடகை நிர்ணயம் செய்து பழைய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து செயல்பட உத்தரவிட வேண்டுகிறோம். வாடகையை உயர்வு செய்தாலோ அல்லது பொது ஏலத்தில் விட்டாலோ கடையை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். கடை அகற்றப்படாமல் தொடர்ந்து செயல்பட ஆவண செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.