நாகர்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:15 AM IST (Updated: 31 July 2017 11:33 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தாமல் முறைகேடாக இடமாறுதல் ஆணை வழங்குவதை கண்டிப்பது, அவ்வாறு வழங்கப்பட்ட இடமாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மரியமிக்கேல் தலைமை தாங்கினார். இணை செயலாளர் கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் செயலாளர் சேவியர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார் நன்றி கூறினார்.

Next Story