பழனியில் பரபரப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. வீடு மீது கல்வீச்சு


பழனியில் பரபரப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. வீடு மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 1 Aug 2017 3:30 AM IST (Updated: 1 Aug 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், முன்னாள் எம்.எல்.ஏ.வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி,

பழனி நேதாஜி நகரில் குடியிருப்பவர் சின்னச்சாமி. இவர் 2001–2006 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். பின்னர் அவர், தே.மு.தி.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து தே.மு.தி.க.வில் இருந்து விலகி 2015–ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். தி.மு.க.வில் தற்போது மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளராக உள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் சின்னச்சாமி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த மர்மநபர்கள் சிலர் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்த கற்கள் வந்து விழுந்ததில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

சத்தம் கேட்டு சின்னச்சாமி எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் பழனி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கல்வீசிய தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story