சீமைக்கருவேல மரங்களை அகற்றி மருதையாற்றை பராமரிக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
சீமைக்கருவேல மரங்களை அகற்றி மருதையாற்றை பரா மரிக்க வேண்டும் என பெரம்பலூர் இளை ஞர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக் டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்கள் கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தனர். இம்மனுக்களின் மீது சம்பந்தப் பட்ட அரசு அலுவலர்கள் உரிய நட வடிக்கை எடுத்து மனு தாரருக்கு தெரியப்படுத்து மாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி, பாளையம், குரும்பலூர் ஆகிய கிராமங் களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியிலுள்ள குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஆகிய 2 ஏரிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. மேலும் இங்கு வாழும் மான், பன்றி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரத்தில் இரைதேடி வயல்வெளிப் பகுதிக்கு வந்து பயிர்களை நாசம் செய்கின்றன. எனவே குரும்பலூர் ஏரி, செஞ்சேரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி அங்குள்ள மான் உள்ளிட்ட விலங்குகளை வனத்துறையினர் பிடித்து சரணாலயத்தில் விட வேண் டும் என்று கூறியிருந்தனர்.
பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலை பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் (வயது 53) என்பவர், காலியான தண்ணீர் பாட்டில்களை மாலையாக கழுத்தில் அணிந்தபடி வந்து குடிநீர் பிரச்சினை தொடர்பாக மனு கொடுத்தார். அதில், எங்கள் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. அப்படி இருக் கையில் சிலர் சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு குடிநீர் சீராக கிடைப்ப தில்லை. எனவே மின் மோட்டர் வைத்து குடிநீர் உறிஞ்சும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்கப்படுகிறது. அதனை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போல் பெரம்பலூர் மாவட்ட புதிய பயணம் நண்பர்கள் குழுவை சேர்ந் இளைஞர்கள் கருவேல முட்செடிகள், கோரைப்புற்கள் ஆகியவற்றை கையில் ஏந்திய படி வந்து அளித்த மனுவில், பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய், செல்லியம் பாளையம் உள்ளிட்ட கிரா மங்களில் சிறு குன்றுகளில் உற்பத்தியாகும் மருதையாறு புதுநடுவலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாய்ந்தோடி கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. தற்போது ஆக்கிரமிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் மருதையாற்றில் நீர் வழிந் தோடும் பகுதி சுருங்கி வருகிறது. மேலும் சீமைக்கரு வேல மரங்களும் அதிகமாக வளர்ந்துள்ளதால் மருதையாற் றில் ஓடும் மழைநீர் விரைவில் வற்றி விடுகிறது. எனவே சீமைக் கருவேல மரங்களையும், ஆக்கிரமிப்பையும் அகற்றி மருதையாற்றை பராமரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அதிகாரி பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், ஊராட்சிகள் உதவி இயக்கு னர் (தணிக்கை) பாலன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story