லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்ல எதிர்ப்பு; கிராம மக்கள் சாலைமறியல்
கோவில்பட்டி அருகே லாரிகளில் தண்ணீர் எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரம் கிராம பகுதியில் விவசாய நிலங்களில் சிலர் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, தண்ணீரை விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து தினமும் 20-க்கு மேற்பட்ட லாரிகள், டிராக்டர்களின் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் கெச்சிலாபுரத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. அங்குள்ள வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன.
எனவே கெச்சிலாபுரத்தில் இருந்து லாரிகள், டிராக்டர்களில் தண்ணீர் எடுத்து செல்லக் கூடாது என்று கூறி அப்பகுதி மக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் கெச்சிலாபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும், கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கெச்சிலாபுரத்தில் இருந்து தண்ணீர் விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும், லாரிகள், டிராக்டர்களில் தண்ணீர் எடுக்க வந்தால் அதனை சிறைபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story