தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:15 AM IST (Updated: 1 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி நாகையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் நாகை ஒன்றியக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜீவாராமன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் மாரிமுத்து, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சித்தார்த்தன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியினை உடனே வழங்க வேண்டும். நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு புதிய அடையாள அட்டை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதியோர், மாற்றுத்திறனாளி, விதவைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு மனு அளித்து காத்திருப்பவர்களுக்கு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூங்கொடி, விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த குமார், இடும்பையன், ஜோதிபாசு, கணபதி, சசி குமார், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story