சாலையோர வியாபார தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
குமாரபாளையத்தில் சாலையோர வியாபார தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என நேற்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
நாமக்கல்,
குமாரபாளையம் சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு ஓரங்களில் தள்ளுவண்டி வைத்தும், தரைகளில் விரிப்புகள் போட்டும் காய்கறிகள், திண்பண்டங்கள், வளையல்கள் என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இன்றி இந்த தொழிலை செய்து வருகிறோம். தினசரி குத்தகைதாரர்களுக்கு ரூ.20, ரூ.30 என செலுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் குமாரபாளையம் நகராட்சி தெருவியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கியது. கணக்கெடுப்புக்கு பிறகு நகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்பட்ட தேர்தலில் வணிககுழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, வணிககுழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவிற்கு தெருவியாபாரிகளை ஒழுங்குப்படுத்தவும், போக்குவரத்து பாதிப்பு என்றால், அதை சீர் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கடந்த 27-ந் தேதி குமாரபாளையம் வருவாய் ஆய்வாளர் தெருவோர வியாபாரிகள் அனைவரும் 31-ந் தேதிக்குள் (நேற்று) தள்ளுவண்டிகளை அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் பொருட்களை தூக்கி சென்று விடுவோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த அறிவிப்பினை ரத்து செய்து, சாலையோர வியாபார தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story