கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை
நாமக்கல் அருகே உள்ள தெத்துக்காடு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது தெத்துக்காடு கிராமம். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கலெக்டர் ஆசியா மரியத்திடம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கு ஜேடர்பாளையம் காவிரி குடிநீர் வாரம் ஒருமுறை வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் காவிரி குடிநீர் வருவது இல்லை. எனவே ஊரில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். மொத்தம் உள்ள 8 ஆழ்துளை கிணறுகளில் ஒரே ஒரு கிணற்றில் இருந்து மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல நாமக்கல் நகராட்சி செம்பாளிகரடு ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதாகி இருப்பதால், தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது தொடர்பாக நாமக்கல் நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பழுதான மின் மோட்டாரை சரிசெய்து சீராக தண்ணீர் வினியோகம் செய்ய தாங்கள் (கலெக்டர்) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story