பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக சுனில் குமார் பொறுப்பேற்றார்
கர்நாடகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து நேற்று மாநில அரசு உத்தரவிட்டது. பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக சுனில் குமார் பொறுப்பு ஏற்று கொண்டார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு;-
சத்திய நாராயணராவுக்கு புதிய பொறுப்பு
* புள்ளியியல் மற்றும் தொலைதொடர்பு பிரிவில் (பெங்களூரு) கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அஷ்கித் மோகன் பிரகாஷ், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அத்துடன், இவர் உளவுத்துறை (பெங்களூரு) டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய பிரவீன் சூட் புள்ளியியல் மற்றும் தொலைதொடர்பு பிரிவு (பெங்களூரு) கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
* கர்நாடக மாநில போலீஸ் குடியிருப்பு வாரியத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றிய சுனில் குமார், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.
* பெங்களூரு வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்த ஹர்சா, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
* சிறைத்துறை டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பணி காத்திருப்போர் பட்டியலில் இருந்த சத்திய நாராயணராவ், டி.ஜி.பி. அந்தஸ்தில் தீயணைப்புதுறை இயக்குனர் மற்றும் ஊர்க்காவல்படை பொது கமாண்டோவாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பணி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பு ஏற்பு
இந்த பணி இடமாற்றத்தை தொடர்ந்து நேற்று இரவில் 8 மணியளவில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய போலீஸ் கமிஷனராக சுனில் குமார் பொறுப்பு ஏற்று கொண்டார். அவரிடம் பெங்களூரு மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story