பாலக்கோடு தாலுகாவிற்கு நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை
ஆழியாளம் அணைக்கட்டை உயர்த்தி பாலக்கோடு தாலுகாவிற்கு நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி,
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பஞ்சப்பள்ளி சின்னாற்றில் அதிக தண்ணீர் வரும்போதும், பஞ்சப்பள்ளி அணையில் தண்ணீரை தேக்கி வைத்திருந்தபோதும் தர்மபுரி மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக படிப்படியாக தண்ணீர் தேவை அதிகரித்ததால் அந்த பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டது.
இதன்காரணமாக பஞ்சப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்கள், சின்னாற்றின் இருபக்கங்களில் சுமார் 50 கி.மீ. பரப்பில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் தென்னை, நெல், மஞ்சள், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் வறண்டு விட்டது. இதனால் பயிர்கள் காய்ந்ததோடு, இந்த பகுதியில் குடிநீரும் கிடைக்காத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒகேனக்கல்லில் இருந்து தர்மபுரி நகருக்கு போதுமான அளவில் தண்ணீர் வழங்கப்படுகிறது. எனவே மழைக்காலம் தொடங்கும்வரை பஞ்சப்பள்ளி அணை மற்றும் சின்னாறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தர்மபுரிக்கு வழங்க தண்ணீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பஞ்சப்பள்ளி, சின்னாறு பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். அக்காவதி நதி தண்ணீரை ஆணைக்கல், தளி, தேன்கனிக்கோட்டை வழியாக பஞ்சப்பள்ளிக்கு கொண்டு வர வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள ஆழியாளம் அணைக்கட்டை 100 அடி அளவிற்கு உயர்த்தி தூள்செட்டி ஏரி, கெலமங்கலம் ஏரி வழியாக கால்வாய் அமைத்து பாலக்கோடு தாலுகாவிற்கு நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். பஞ்சப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் உள்ள கல்குவாரிகளில் வெடிகள் வைப்பதால் விவசாய நிலங்கள், வீடுகள் சேதமடைகின்றன. இதை தடுக்க பாதிப்பை ஏற்படுத்தி வரும் கல்குவாரிகளை தடைசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story