பிளஸ்-2 கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பிளஸ்-2 கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவர்கள்-பெற்றோர் மனு அளித்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், பிளஸ்-2 தேர்வில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் பிளஸ்-2 தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் மிக அதிக மதிப்பெண்கள் பெற்ற எங்களால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட நீட்தேர்வில் 37 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெறமுடிந்தது. எனவே தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த பல லட்சக்கணக்கான மாணவ-மாணவிகளின் நலன் கருதி பிளஸ்-2 கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தனர்.
தர்மபுரி நெல்லிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 35 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழிப்பாதையை ரெயில்வே நிர்வாகம் கருங்கல் சுவர் கட்டி அடைக்கும் பணியை மேற்கொண்டு உள்ளது. இந்த வழிப்பாதை அடைக்கப்பட்டால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்றாட பணிகளை மேற்கொள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த வழிப்பாதையை அடைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.
நல்லம்பள்ளி தாலுகா கெட்டுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் சிலர் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். இங்குள்ள பள்ளி வளாகம் மற்றும் மைதானங்களில் காலி மதுபாட்டில்களை வீசி செல்கிறார்கள்.
இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஜருகு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியை சேர்ந்த வீரப்பன் என்பவர், ஆதிதிராவிட மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு தர வேண்டும் என்று கோரியிருந்தனர்.

Related Tags :
Next Story