கோவில்பட்டியில் பத்திர பதிவு எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம் பழைய முறையிலேயே பத்திரவு பதிவு செய்ய வலியுறுத்தல்
பழைய முறையிலேயே பத்திர பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று கோவில்பட்டியில் பத்திர பதிவு எழுத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
பழைய முறையிலேயே பத்திர பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று கோவில்பட்டியில் பத்திர பதிவு எழுத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்–லைன் பதிவுக்கு எதிர்ப்புதமிழகத்தில் 568 பத்திர பதிவு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக கோவில்பட்டி உள்பட 46 பத்திர பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் மூலமாக பத்திர பதிவு செய்யும் முறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் மின்தடை நேரங்களில் பத்திர பதிவு செய்வதில் சிரமம் ஏற்படும். எனவே பழைய முறையிலேயே பத்திர பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டியில் பத்திர பதிவு எழுத்தர்கள் நேற்று ஒரு நாள் அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்பின்னர் அவர்கள், கோவில்பட்டி பத்திர பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திர பதிவு எழுத்தர்கள் சங்க தலைவர் மாரியப்பன், ஏஞ்சலா, மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனால் பத்திர பதிவு அலுவலகத்தில் நேற்று பத்திர பதிவு, பிறப்பு, இறப்பு, திருமணம் பதிவு, வில்லங்க சான்று, பத்திரம் நகல் பெறுதல் போன்றவற்றுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஆன்லைன் மூலமாக பத்திர பதிவு மேற்கொண்டனர்.